Archive for August 2011

என்சுவாச காற்றே...5

கிரஹாம்பெல்...
நான்
வணங்கும்
இறைவனுக்கு அடுத்து
இவரைத்தான்
வணங்கிறேன்..
தொலைப்பேசியை
கண்டுபிடித்ததால்...!

என் சுவாசத்தின்
வாசத்தை
இதன் மூலம் தான்
கேட்டுணர்ந்தேன்..!

சின்ன சின்ன
குறும்பு பேச்சு..!

திகட்டா தீந்தமிழ் பேச்சு..!

காலைவாரும்
கிண்டல் பேச்சு..!

என் காதலை சொன்ன
கனவு பேச்சு..!

அய்யோ கடவுளே...,
என் கூறும்
உன் மழலை பேச்சு..!

இப்படி எவ்வளவோ
உதவியது
என் வீட்டுத் தொலைப்பேசி..!

....... .... .... ..... .......

ஒவ்வொரு முறை
தொலைபேசி மணி
அடிக்கும் போதும்
கால்களுக்கு முன்னே
மனம் தான் செல்கிறது..

உன் குரல் கேட்காதா என்று...!

.            .........

காதல் ..,
சொல்லும் முன்பும்
சொல்லும் போதும்
சொன்ன பின்பும்
சுகமாய் தெரியும்
காதலியை பொருத்து...!,,,,,, ,,,, ,,,,,,,,

ஒவ்வொரு நாள்
இரவையும்
எதிர்பார்த்து
காத்திருப்பேன்..,
நீ...,
படுத்து உறங்கிய
தலையணையும்,
போர்வையும்
என் மடி மீது
தலை சாய்த்து
உறங்குவதை
பார்க்க...


,,,,,

என்
இருண்ட வானில்
சூரியனாய் வேண்டாம்..
சந்திரனாய் வேண்டாம்..,
ஒரு சிறிய
மெழுகுவர்த்தியாய்
வந்திடு
அது போதும்
என்னையே உருக்கிக்கொண்டு
நான் வாழ்ந்திடுவேன்..

பிரியமுள்ள காதலிக்கு
பிரியமுடன்......


Saturday, August 27, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

என்சுவாச காற்றே...4

காதல் நாடகத்தில்
காற்றும் கூட நடித்திடுமாம்!

காதலி....
ஒரு பதில்
சொல் போதும்
ஒரு ஆயுள் வாழ்ந்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்.!

கடைக்கண் 
பார்வைபோதும்
காலமெல்லாம் வாழ்ந்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்..!

நீ கேட்பதானால்
உயிரை கூட கொடுத்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்

இவை தான் காதல் எனில்
இவையல்லவே என் காதல்....
அப்படியானால் 
என்ன பெயர் வைக்க
என் காதலுக்கு...?

என் விழி 
உன்னை ரசிப்பதாய் இல்லை..
என் விரல்
உன்னை தொடுவதாய் இல்லை...
என் மனம்
உன்னை விரும்புவதாய் இல்லை...

என்னுடைய 
இன்ப துன்பங்களை
உன்னோடு பங்கிட வேண்டும்!
உன்னுடைய 
இன்ப துன்பங்களை
என்னோடு பங்கிட வேண்டும்!
இறப்பென்று 
வந்தால் கூட
இருவரும் சேர்ந்ததாய் 
இருந்திட வேண்டும்..!
காலமெல்லாம் 
கைபிடிக்க
இல்லத்தார் சம்மதத்தோடு
இருவரும் சேர்ந்திட வேண்டும்...!
இதற்கான உறுதிமொழி -- நீ
தந்திட வேண்டும்..!

இந்த சுயநல காதலுக்கு
என்ன பெயர் நான் வைக்க..?

உரு கொடுத்த உனக்கு
பெயர் வைக்க தெரியாதா..?
நல்லதொரு பெயராய்
வைத்துவிடு
செல்லமே....!

- - - - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - -- 

ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கும் பொழுதும்
என் இருதயம் கேட்கின்றது...
எத்தனை நாட்களுக்கு தான்
காதலை
மறைத்து வைப்பாய்யென்று..
எங்கோ ஒரு மூலையில்
ரிங்காரமிடும்
வண்டினை போல்
நெஞ்சை குடைகின்றது..!

இதோ ....
என் காதலை
உன்னிடம்
இறக்கிவைக்கின்றேன்..!


ஒரு
ஏழை கவிஞனின் பாடல்
செவிட்டு கிழவன்
காதில் கேட்பதில்லையே...

..............................Thursday, August 25, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

என்சுவாச காற்றே...3

அது ஒரு தீபாவளி திருநாள்!
வாசலில் தீபங்கள்
தவங்கிடக்க!
வானத்தில்
மங்கள வாக்கியம் இசைக்க
தித்திப்பான நேரத்தில்,
மத்தாப்பு கையேந்தி
பட்டாசு நீ வெடிக்க
பட்டாடை உடுத்திவந்தாய்..?

பட பட ...
என பட்டாசு
வெடிவெடிக்க
சிதறிய தீத்துளி - உன்
உடைமீது விளையாட
ஓ....
 எனவே நீ அழவே
முத்தான மிட்டாயை
விரலோடு சேர்த்தது போல்
இதழோடு சேர்த்தனரே..!
நிற்காத உன் கண்ணீர்
வற்றாமல் போனதை
தூரத்தில் இரு கண்கள்
துயரத்தில் விழுந்ததே!

-------------------------

சிலு சிலு சிலுவெனவே!
சித்திரம் பேசும் பூங்காற்று
மழைக்கால நேரத்தில்
மனதோடு உறவாட
மழைத்தூறல்
மயிலிறகால்
கதை சொல்லிற்று..,

          .............

இலந்தை மர பழமொன்றை
இரு காலால் பற்றிக்கொண்டு
மாமர கிளையொன்றில்
குயில் ஒன்று கூவியது....

ஆலமர உச்சியினில்
அணில் கூடி
தாவல் தொழிலில்
ஈடுபட்டிருந்தது..!
அந்த பொழுதினில்
ஒரு
பச்சைக்கிளி கூட்டம்
பட்டாம் பூச்சி
பிடித்துக் கொண்டிருந்தது..,
அதில் ஒரு பச்சைக்கிளி
என்னருகே ஓடி வந்து
மாமா
எனக்கும்
பட்டாம்பூச்சி பிடித்து தா..
என்றதுவே..
மந்திரச் சொல் காதில் விழ
மான்போல துள்ளிச்சென்றேன்
பட்டாம்பூச்சி பிடிக்கும் போது
காலில் முள் ஒன்று தைத்திட
பொங்கி வரும் குறுதி தன்னை
உன் கண்ணீர் கழுவியதே..~

முள்ளுக்கு நன்றி சொன்னது இதயம்...

கரையை தொடாத அலையுமில்லை...
காதலை தொடாத ஆளுமில்லை..
என்ன ...,
சிலரது காதல்
அலையினை போல
தொட்டதும் திரும்பி விடுகிறது
அல்லது திருப்பி
விடப்படுகிறது...

என் மனதில் காதல் வந்தது
எப்போதென்பதனை
நானறியேன்!

நாம் தத்தி நடந்த
குழந்த பருவமா..?
சுத்தித் திரியும்
இளமைப் பருவமா..?
எப்போது வந்தது
என் காதல்...?
Posted by தொழிற்களம் அருணேஸ்

என் சுவாசக் காற்றே..2

அடி பெண்ணே!
என்னை சுற்றி
எத்தனையோ உறவுகளிருக்க.,
என் மனம் உன்னை மட்டும்
சுற்றிவருகிறதே ஏனடி..?
என் விழி வழி
முறையின்றி வந்த
முழு மதியே!


தத்தித் தத்தி நாம் நடந்த நாட்களில்
திக்கித் திக்கி நீ பேசும் மழலையில்
சுற்றிச் சுற்றி வாராளி இந்தகால்கள்
இப்போது மட்டும் ஏனிந்த மாற்றம்..?

என்ன பதில் சொல்ல..?
உன் பார்வைகள்
படுத்தும் பாட்டினை
என் இருதயத்திற்கு
எப்படியம்மா  புரியவைப்பேன்!

பேதைப் பெண்ணே!!
ஞாபகம் இருக்கிறதா..,?
நடைகள் பயிலும் நாட்களிலிலே
நடந்தவைகள் யாவும்
நினைவிருக்கா..?

எண்ணி இன்று பார்க்கையிலே
எல்லாம் கணவாய் தெரிகிறதே!!
காலம் பின்னே செல்லட்டுமே..!!


ஓங்கி வளர்ந்த காட்டினிலே!
ஒய்யாரமாய் ஆலமரத்தினிலே!!
ஒருசோடி பறவை கூட்டினிலே!!!
உட்கார்ந்திருக்கும் முட்டையினை,
விழி இரண்டாய் விழுங்கியவளாய்...!

கட்டுக்கடங்கா நதி தன்னை!
எட்டுத்திக்கும் கட்டிவைத்து!!
திட்டு திட்டாய் நுரையோடு,
கூந்தல் என்று வாய்த்தவளாய்..!

நீல வானம் நீர் கொடுத்து!
பூமி தன்னை சீர்படுத்தி!!
சாம்பல் கொண்டு உறம் படைத்து!!!
என் பாட்டி வீட்டு பரங்கிக் காயாய்..,
திருமேனி படைத்தவளாய்..!

என் மன வயக்காட்டில்
வீற்றிருக்கும்
என் சோலக் காட்டு பொம்மையே..!

Wednesday, August 24, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

என் சுவாசக் காற்றே..

காதல் ....
இது வந்து போகாத
வழித்தடம் இல்லை..
பாலையில் தெரியும் காணலாய் 
உணர மட்டுமே முடிகிறது ..

காரணம் ...
இதுவின்றி எதுவும் நடபதில்லை,.
காடும், மலையும், நீரும், நெருப்பும்,
அலையும், கடலும்,,,,
இப்படி எதுவும் காரணம் இல்லாமல்
பிறப்பது இல்லை.

இங்கு நான் படைத்திருக்கும் 
ஒற்றைச்சொல் தொகுப்பினது
பிறப்பிற்கு காரணம்.,
என் நெஞ்சோடு நிலை நிருத்தி
கண்ணோடு இமை தொடுத்து
சிறைபிடித்து என் சுவாசக்குழலில்
இசைபாடும் "சங்கீதமே"
உனக்காக....
கண்ணோடு கண் சேர
வருவது காதல்!
கையோடு கை சேர
வருவது காதல்!
சொல்லோடு சொல் சேர
வருவது காதல்!
இத்தனை காதலில் என் காதல்
என்னென்று நான் சொல்ல..,

                     இருக்கட்டுமே அதனாலென்ன..?

கண் பார்த்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
கை சேர்ந்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
மனம் கலந்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
அப்படியானல்
இவை மூன்றுமல்ல - என் காதல் !

ஆம்.,
வித்யாசமானது !
விசித்திரமானது !
ஆனால் உண்மையானது..,


புதிரொன்றை போட்டு
புரியாத போது
விடை சொல்ல வழி இல்லையேல்.,
என் விதி நொந்து
போய்விடாதோ..?
-என புழம்பாதே!

அடி முட்டாள் பெண்ணே..!

உருவமும்..,
ஓசையும் கொண்ட
என் தமிழிடம்
உணர்வுகளை பங்கிட
என் உள்ளம்
எப்படி ஒத்துக்கொள்ளும்..?

..... என் உதடுகள்
ஆடும் நாட்டியத்தை - உன்
விழி வழி பார்த்தால்
புரிந்திடுமோ?
செவி வழி கேட்டால் நான்
என் மதி 'வலி' புரியும்.

இருப்பினும்.,
உனக்காக
சஎன் தமிழ் சொல்லும்
சிறு க'விதை'..!
Monday, August 22, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

தனிமை தந்த காதலியே..!

எவ்வளவோ கனவுகளுடன்
காதலித்தேன்...

என் காதலியே நீ தந்த காதல் பரிசு!

சூழ்நிலைகளை காரணிகளாக்கி..,
மகரந்தங்களின் தூபம் கொண்டு
மண்செரியும் வாசணையில்
அன்று நீ கொடுத்த முதல் முத்தம்
நெஞ்செல்லாம் பூரிக்கிறதடி..!

சுற்றத்தின் சுகம் தனை மறக்க வைத்தாய்,
சூரியனையும் முழு நிலவாய் ரசிக்க வைத்தாய்,
எத்தனையோ ஆண்டுகளின் நீளம் குறைத்தாய்..,
என் பெயரையே என்னிடம் எடுத்தும் உரைத்தாய்!

காதலுடன் வானம் நோக்கி ஏங்குகிறேன்..,
காதலியே உன் வரவை தேடுகிறேன்..,

Saturday, August 13, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

ச்ச்சோவென பெய்யும் மழை..

கீழ் வானம் சிவந்திருக்குதடி...


அதில் கார்மேகம் கலந்திருக்குதடி..


சுமைகள் எல்லாம் இறக்கிவிட்டு...


ஒளியேற்றும் நேரம் அதில்


உன் வரவைத் தேடுகிறேன்...
                         காதலுடன்...


Monday, August 8, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

facebook link

Google+ Followers

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -