Archive for January 2013

காணச்சகியாதோ கண்ணம்மா!!

பராசக்தியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பாட்டன் பாரதியின் தொண்டைக்குழியில் தொக்கி நின்ற வேதனையின் துயரம் எப்படி இருந்திருக்குமோ அதே வேதனையிலான இந்த நிமிடத்தின் எனது காணச்சகியாதோ கண்ணம்மா...


காணச்சகியாதோ கண்ணம்மா!!

பிள்ளைகள் பத்தும்
பார்த்து வளர்த்த
அச்சு பிழைகளாய்
என் பாரதத்தாய்
பெற்றெடுத்தாளோ?

தொப்புல்கொடி தின்னும்
முத்துப்பிள்ளை
அரச கட்டிடத்தில்
தூங்கிவழியுது

பட்டங்கள் கொடுக்கவும்
பாலங்கள் போடவும்
பல  திட்டங்கள்
தீட்டுது அதிலே
விரல்
தீண்டவும் செய்யுது..!!


தட்பமும்  வெட்பமும்
தாவித் தொக்குது
தப்பில்லை
கொழுத்திப் போடுவது
அறிவுப்பிள்ளை
அனுவும் துளைப்போம்
ஆழியையும் கெடுப்போம்
நிலத்தடி குறைப்போம்
நீடுழி வாழ!!

ஊதாரிப் பிள்ளை
ஊழ்வழி பிள்ளை
எச்சிலும் துப்புது
எட்டியும் உதைக்குது
தொட்டிலில் கண்ட
சுகம் தேடி
புட்டியை தேடுது!!

வீரம்பேசும்
வியாபாரப் பிள்ளை
கட்சியில் சேருது
காசுகள் கேட்குது
கட்டிய மனைவியையும்
கம்பிக்குள் பாக்குது!!

பாச்சிளம் கடைக்குட்டியோ
பாலியல் செய்யுது
பாவைப் பெண்டீரோ
நாகரீகம் பேசுது
நாவெல்லாம் நீளுது
நமட்டுச் சிரிப்பும் வேறு!!


கேலியும், கூத்தொன்றே
வாழ்வென போனதால்
பாட்டனே! உன் சவக்குழி
அருகே இடம் தேடி
ஒடி வரும்
கைக்குழந்தை நான்
கவியெழுதி
காணச்சகியாது 
Saturday, January 19, 2013
Posted by தொழிற்களம் அருணேஸ்

தோழியானவள்!!


விரிசல்களில் எல்லாம்
தேடி முளைப்பது இல்லை
விதைகள்!!
காதலும் அப்படித்தான்
காரணங்களை தேடி
பின் முளைப்பதில்லை...

உன் நட்பினை
தேடி வரும் நான்
காதலென இன்னும்
உணரவில்லை தோழா!!காலங்களின் சுழற்சியில்
காதல் செய்யலாம்(!)
விடியலின்
வெளிச்சங்களைப் பற்றி
இரவுக்கு இப்போதே
எப்படி தெரியும்?

காத்திரு தோழா

- நட்புடன்
உன் தோழியானவள்!!Tuesday, January 8, 2013
Posted by தொழிற்களம் அருணேஸ்

ஒரு கனவும் மூன்று காதலும்..

இதோ,
இங்கே தான்
முதன் முதலில்
அவளை கண்டேன்

அவள்
இருக்கையின் சந்தடிகளில்
துப்பட்டாவுடன் சேர்த்து
என் நிமிடங்களும்
சிக்கிக்கிக் கொண்டன

பேருந்தின் அசைவுகளிலும்
நெரிசல்களின் வசைவுகளிலும்
இளமஞ்சள் தேவதையின்
ஓசையில்லா
உதடுகள் இரண்டும்
இன்னமும்
இம்சை செய்கின்றது.
முதல் காதல்,
இப்படித்தான் முளைவிட்டது..

சிக்கல்கள் இல்லாத
வாழ்க்கையின் 
சுகங்களை சொல்லும்
செல்லப் பருவத்தில்
பார்த்த உடனே
பிடித்துப் போகும்
மஞ்சள் தேவதையின் 
காதல்...

இளமஞ்சள் நிறத்தாள்
செய்த இம்சைகள்
கொஞ்ச நஞ்சமா என்ன?

பசுமைக்காடுகளின்
நடுவில் 
மெல்லிய பனியில்
வென்புள்ளிகள் தைத்தவள்
துள்ளி விளையாடினாள்
என்னவளின் கண்களில்ஓ.. அவள் சிரிப்புக்கு
முத்தாய்ப்பு சேர்ப்பதற்காகவா,
கங்கைச் சுழல்கள்
போட்டியிட்டு 
இரு கண்ணத்தில்
தங்கிவிட்டது?

ஏர்வாடியின் 
அத்தனை கூட்டமும்
கூர்வாள் விளியால்
ஆனாது என்பதை
இப்போது உணர்கிறேன்.

அந்த முதல் காதல்
தவிப்பு செய்யும் என்பதை...

Sunday, January 6, 2013
Posted by தொழிற்களம் அருணேஸ்

கூலுக்கும் ஆசை!!

சிந்தாமல் சிதறாமல்
நீ உதிர்த்த 
வார்த்தைகளை எல்லாம்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேன்!

உரசல்களை உணரவில்லை
ஆனால் உசுருக்குள்
ஏதோ ஒருவித
இன்பச் சுகம்!
நிமிசத்திற்கு நிமிசம்
குறுஞ்செய்திகளின்
வருகையை எதிர்பார்த்தே
காத்திருக்கும்
கண்களும் கேட்குதடி,
உன் நட்பை களைத்துவிடாது
என் காதாலாய் மாற்றிவிடும்
காரணங்களைத் தேடி!!!
Posted by தொழிற்களம் அருணேஸ்

facebook link

Google+ Followers

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -