Posted by : Unknown Thursday, August 25, 2011

காதல் நாடகத்தில்
காற்றும் கூட நடித்திடுமாம்!

காதலி....
ஒரு பதில்
சொல் போதும்
ஒரு ஆயுள் வாழ்ந்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்.!

கடைக்கண் 
பார்வைபோதும்
காலமெல்லாம் வாழ்ந்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்..!

நீ கேட்பதானால்
உயிரை கூட கொடுத்திடுவேன் ---- என்கிறது ஒரு காதல்

இவை தான் காதல் எனில்
இவையல்லவே என் காதல்....
அப்படியானால் 
என்ன பெயர் வைக்க
என் காதலுக்கு...?

என் விழி 
உன்னை ரசிப்பதாய் இல்லை..
என் விரல்
உன்னை தொடுவதாய் இல்லை...
என் மனம்
உன்னை விரும்புவதாய் இல்லை...

என்னுடைய 
இன்ப துன்பங்களை
உன்னோடு பங்கிட வேண்டும்!
உன்னுடைய 
இன்ப துன்பங்களை
என்னோடு பங்கிட வேண்டும்!
இறப்பென்று 
வந்தால் கூட
இருவரும் சேர்ந்ததாய் 
இருந்திட வேண்டும்..!
காலமெல்லாம் 
கைபிடிக்க
இல்லத்தார் சம்மதத்தோடு
இருவரும் சேர்ந்திட வேண்டும்...!
இதற்கான உறுதிமொழி -- நீ
தந்திட வேண்டும்..!

இந்த சுயநல காதலுக்கு
என்ன பெயர் நான் வைக்க..?

உரு கொடுத்த உனக்கு
பெயர் வைக்க தெரியாதா..?
நல்லதொரு பெயராய்
வைத்துவிடு
செல்லமே....!

- - - - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - -- 

ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கும் பொழுதும்
என் இருதயம் கேட்கின்றது...
எத்தனை நாட்களுக்கு தான்
காதலை
மறைத்து வைப்பாய்யென்று..
எங்கோ ஒரு மூலையில்
ரிங்காரமிடும்
வண்டினை போல்
நெஞ்சை குடைகின்றது..!

இதோ ....
என் காதலை
உன்னிடம்
இறக்கிவைக்கின்றேன்..!


ஒரு
ஏழை கவிஞனின் பாடல்
செவிட்டு கிழவன்
காதில் கேட்பதில்லையே...

..............................



{ 4 comments... read them below or Comment }

  1. //ஒவ்வொரு முறையும்
    உன்னை நினைக்கும் பொழுதும்
    என் இருதயம் கேட்கின்றது...
    எத்தனை நாட்களுக்கு தான்
    காதலை
    மறைத்து வைப்பாய்யென்று..//

    வரிகள் அனைத்தும் அருமை நண்பரே..

    வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறையும்
    உன்னை நினைக்கும் பொழுதும்
    என் இருதயம் கேட்கின்றது...
    எத்தனை நாட்களுக்கு தான்
    காதலை
    மறைத்து வைப்பாய்யென்று..
    எங்கோ ஒரு மூலையில்
    ரிங்காரமிடும்
    வண்டினை போல்
    நெஞ்சை குடைகின்றது..!

    அருமையான கவிதை வரிகள் வாழ்துக்கள்
    சகோ .வாருங்கள் எம் ஆக்கங்களையும்
    கண்டு மகிழுங்கள் .நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  3. தூரத்து உறவினருக்கு
    தூய்மையான நெஞ்சினருக்கு
    நன்றி...!

    ReplyDelete
  4. ஒரு
    ஏழை கவிஞனின் பாடல்
    செவிட்டு கிழவன்
    காதில் கேட்பதில்லையே...//

    அருமை.

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -