அவள் என் காமாட்சி !!

     நிகழ்கின்ற மாற்றங்கள் அனைத்துமே காலம் கற்றுக்கொடுக்கின்ற பாடம் தான்.  சொல்லில், செயலில், உணர்வில் என்று புரிந்துகொள்ள முடியாத ஒர் புதிய உணர்வை நான் கற்றுக்கொள்ள அறுபது  வருடங்கள் ஆயிற்று. ஒரு வித்தியாசம்,  இந்த முறை எனக்கு கற்றுக்கொடுத்தது காலம் அல்ல, 

அவளே!!  ஆம், அவள் என் காமாட்சி!!

இதோ இதுவரை சொல்லிடாத காதலை இறக்கி வைக்கிறேன் இளமையோடு என் அறுபதாம் வயதில்

அன்புள்ள காமாட்சி!

          இந்த கடிதம் உனக்காக மட்டுமே!!  எல்லாம் புதிதாய் இருக்கிறது காமாட்சி. இதுவரை அன்புள்ள என்ற வார்த்தையை உன்னிடம் நான் உபயோகித்ததே இல்லை, துவக்கத்தின் சாதாரண தோரணை என்று நிச்சயாய் நீ அதை எடுத்திருக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும். 

         உனக்கு தெரியுமா காமாட்சி? இதுவரை உன்னை அதட்டியே பழகி விட்ட எனது தொண்டைக்குழி, இப்பொழுது என் தமிழ் வார்த்தைகளை தேடி எங்கெங்கோ அழைந்து கொண்டு, ஒரு இனம்புரியாத பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறது. மிகுந்த காதலை உன்னிடம் இறக்கி வைக்க இதைவிட்டால் வேறு வழி எனக்கு தெரியவில்லை. கடிதத்தின் துணையோடு காதல் செய்வதும் ஒருவித அனாயசிய கலைதான் போலும்.

         என்னவாயிற்று இந்த கிழவனுக்கு? பேரப்பிள்ளைகள் பேர் சொல்ல  வளர்ந்த பின்பு காதல் செய்ய இப்போது மட்டும் என்ன புதிதாய்? ம்ம்?

கரைந்தோடிய நிமிடங்களையெல்லாம் கையகப்படுத்த நினைக்கிறது மனசு 

ஏ!! உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா?  கடந்த இருபத்தைந்து வருடங்களாய் உன்னிடம் சொல்ல எவ்வளவோ முயற்சித்து வருகிறேன். தடங்களாய், என் காதலை அறிவிக்க தெரியாத மனதில்  ஒரு சோரிய இருமாப்பு.

      இந்த கனத்த மெளனத்தினூடே  எங்கோ படித்த இந்த கவிதை வரிகள் எனக்குதவக் கூடும்

நடுநடுங்கித்தான் போகின்றேன்..!

கடைசி காதல் துளியும் 
காலியாகி அமைதிப்பட்டு போன 
மேகக்கூட்டமாய் 
அல்லல்பட்டும் சொல்ல முடியாத 
காதலை இறக்கி வைக்கும் 
இந்த ஒரு வினாடியில்
.....

நடுநடுங்கித்தான் போகின்றேன்..!

ஞாபகம் இருக்கின்றதா? 

        1977 சூலையின் இந்த நாளை..? இந்த இரவு பொழுதில் வெட்கப்படும் மொத்த நிலவை முகத்தில் தாங்கி என் அருகில் நீ!! பருவத்தை தொட்டதும் இதல்களில் தெரிப்பது வண்ணங்களா!! வாசனைகளா!!?  என்ற பட்டி மன்றமே போட்டதடி எனது நெஞ்சம். மஞ்சத்தில் உனது துணையால்.. முதல் இரவு காமத்தை துணைக்கழைத்து காதலை பின்னுக்கு தள்ளியிருந்தது என்பதை மட்டும் நிச்சயமாக ஒத்துக்கொள்கிறேன். 

எனது வணிக மேம்பாட்டின் கூரிய நேரத்தை கலைத்தவாறு  திடீரென்று நிச்சயிக்கப்பட்ட, வேண்டா உறவாய் உனது துணை  நம்மவர்களால் உண்டாக்கப் பட்டிருந்தது என்பதை நீயும் அறிவாய்.  பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு போகின்ற வரை இந்த உறவு, எஞ்சி வடியும் காமத்தின் சிந்திய கவளமாய் மட்டுமே தெரிந்தது எனக்கு.  அடிக்கடி உன்னை காயப்படுத்தியிருக்கிறேன் அந்த நாட்களில். ஆனாலும் எதர்க்குமே எதிர்ப்பு காட்டாமல் ஏனடி இருந்தாய் அப்போது..? 

 ம்................... புரிகிறது. அசைபோடும் இந்த தருணம் அதற்கான சூட்டுகோலை முதுகெலும்பில் வைக்கும் என்று நீ தெரிந்து வைத்திருந்தாய் தானே?

                அந்த விபத்து. ஆம் அந்த விபத்து மட்டும் நேராமல் போயிருந்தால் மண் திங்கும் இந்த உடம்பு நிச்சயமாய் மனிதனாய் மாறியிருக்காது தான். கை மணிக்கட்டு எழும்பும், தண்டுவடமும் விரிசல் விட்டிருக்கிறது என்று மருத்துவர் சொல்லும் முன்பே நினைவற்றிருந்திருந்த என் காதில் உன் அலுகை சப்தமாக ஒலித்து என் உயிரை மீட்டு தந்திருந்தது. மிகுந்த கனத்த மனத்துடன் சொல்கிறேன் காமாட்சி.. பெற்றவளும் தொட்டலித்து தோற்று விட்டாள் உற்றவளின் கருணை முன்பு.  அந்த நான்கு மாதங்களும் தாயின் கருப்பையில் இருந்த தைரியத்தை உன்னால் தரமுடிந்தது. இதுவரை இருந்த காமவேலைக்காரி தாயின் உருவத்தை தாங்கினால் அந்த நிமிடத்தில். உன்னால் மட்டுமே மனிதனாயானேன் இதை ஒப்புக்கொள்ளும் தைரியத்தை தந்ததும் நீ தான்.




புரிதல்கள் தோற்றுப்போகும் நேரங்களில் பலர் சூழ நிற்கும் ஒற்றைத் தனிமை  அத்தனையையும் கற்றுத் தந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் நீயே என் துணையாய் நிற்கின்றாய்

     ஆமா,, அதென்னடி காமாட்சி உங்கிட்ட ஒரு பழக்கம்? எப்ப எந்த விசேஷத்துக்கு போனாலும் பொம்பளைங்கெல்லாம் ஒன்னா கூடி எங்காவது உட்கார்ந்துக்கறீங்க, ஆனா பந்தி போட ஆரம்பிச்சா மட்டும் நான் எங்கிருந்தாலும் என்னை தேடி பிடிச்சு, சாப்பிட்டீங்ளா? வாங்க சாப்பிடன்னு தனியா வந்து கேட்குறே?  இன்னமும் கூட இதை மாத்த மாட்டீங்கற இல்ல...? செல்ல கருவாச்சி.

         அதட்டியே பழக்கமான வியாபாரிக்கு கொஞ்ச தெரியாது தான். அதுக்காக பாசமே இல்லைன்னு நினைச்சுட்டா எப்படி? நீயே சொல்லு, நம்ம ரெண்டு புள்ளைங்க கல்யாணம் முடியற வரைக்கும் நான் என்னைக்காவது வீட்டுல சாஞ்சு படுத்தது உண்டா?  

தீர்க்கமான அன்புகளெல்லாம் காதலில் மட்டுமே சாத்தியப்படுகின்றன. சாட்சியாய் நீ


        அத விடு,,, கத்தரிக்காய நெருப்புல வாட்டி, பச்சை வெங்காயம்  மிளகா, புளின்னு எல்லாத்தையும் ஒன்னா  சேர்த்து இடுச்சி சூப்பரா ஒரு ஐட்டம் செய்வியே"" அமா அதுக்கு பேரு என்னடி? ப்ப்ப்ப்ப்ப்ச்ச்ச்,,,  ரொம்ப நாளா அதை நல்லாயிருக்குன்னு சொல்ல நினைச்சு சொல்லமாயே போயிருக்கேன் தெரியுமா.? ஆனாலும் எப்படித்தான் கண்டுபிடிக்கிற , எதுவெல்லாம் எனக்கு புடுக்கும் புடிக்காதுங்கறதெல்லாம் ம்ம்..?

என் காமாட்சியும் கத்தரிக்கா கூட்டும்னு ஒரு கவிதையே எழுதலாம் போல இருக்கு...

              இப்பெல்லாம் என் பேரப்புள்ளைங்க என்ன பாத்து என்ன சொல்லுறாங்க தெரியுமா? ஹே பெரிசு!! உன் டாவு எப்ப பார்த்தாலும் மூஞ்சிய தூக்கிக்குதே உனக்கு கோபமே வரலயாங்குதுங்க..  குழந்தைகள் நம்மையும் குழந்தைகளாகவே தான் பார்க்கின்றன. ஊருக்கு மிடுப்பு காட்ட உள்ளுக்குள்ள இருக்கிற பாசத்தை காமிக்காமயே போயிருப்பேன். நல்ல வேலை காலம் இல்ல என் காமாட்சியே எனக்கு சொல்லிக் கொடுத்துட்ட...

ஏய் காமாட்சி நாந்தாண்டி உன் புருசன் சொல்லுறேன்
....
....
....

ஐ லவு யூ.......................

நீயி.....?



        குறிப்பு : மீ டூ ன்னு சொல்ல நைட் மீட் பன்ன வரும்போது  கட்டம் போட்ட பச்ச கன்டாங்கி சேலையில வரவும். 

இப்படிக்கு
நரைமுடிக் கிழவன்
நான் தான்டி


நண்பன் சீனுவின்  திடம் கொண்டு போராடு  தளத்தின் சிறப்பு பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளும் எனது காதல் கடிதம்

உள்ளுணர்வில் நீ

மொழி கடந்த 
அத்தனை உணர்வுகளையும்
உன் ஒற்றை மெளனம் 
கற்றுக்கொடுத்து விடுகிறது...

உள்ளுணர்வின் வழியே
உன்னில் நான் இருந்தாலும்
பொய்த்தே போகின்றது
என் பிதற்றல்கள் எல்லாம்,,
மெல்லிய
உன் கரம் பிடித்து
நடக்கும் இந்த
மழைத்தூரல் மாலையில்...


Sunday, June 2, 2013
Posted by Unknown

முத்தம்

வெட்கத்தால்
நிரப்பப்பட்ட
உன் உதடுகள்
வரையும்
ஓவியம் தான்
இந்த சூடான
முத்தமோ..?


Saturday, May 4, 2013
Posted by Unknown

திருமண பரிசு

கனத்த மெளனம்
உயிர்ப்பில்லாத சிரிப்பு
உறக்கம் தொலைத்த பார்வை
விக்கிக் கொள்ளும் அழுகை
சிக்கித் தவிக்கும் வார்த்தை
தீரக்கூடாத வினாடிகள்
நெருங்க முடியாத சூழல்

இவையனைத்துமாய் நான்


மணக்கோலத்தில்
மேடையில் நீ ...



Sunday, April 21, 2013
Posted by Unknown

விரைவில் வெற்றிச் செங்கொடியோடு


எச்சிலை தொட்டழித்து
எழுதிய எழுத்தின் ஈரம்
இன்னும் காயவில்லை
இருதயத்தின் அடிதொட்ட
இரும்பின் காயம் கண்டேன்...

சுட்டவன் புத்திசாலிதான்,,
மார்த்தொட்ட குண்டு
புறமுதுகுடைத்தால்,
எந்தை மைந்தர்கள் - அவன்
தலை சாய்த்திடுவனரோ
என்றெண்ணியே என் 
நெஞ்சுடைத்து உயிர் பரித்தான்...

காலன் தொட்ட கடைசி மூச்சில்
இந்த காலம் மறக்கா..,
வரலாறானேன்

பச்சிளம் குழந்தையென்
 பசி தீர்க்க
எச்சிலைதிண்ணும் 
கோழையல்ல நான்

விடுதலையுணர்வை 
என் மக்களுக்கு கொடுத்தே
விடைபெறுகிறேன் - அதிலே
அகமகிழ்வடைகிறேன்!!!

துரோகிகளை, எதிரிகளை
இனம் கண்டெழுந்து,
வேட்கையை தகித்துக்கொள்ள
அக்காக்களோ, அண்ணன்களோ
இன்னுயிர் தீர்க்காதீர் - 
இன்னல்கள் தீர 
இனி ஒரு விதி செய்யுங்கள்!!

எந்தையின் மைந்தர்களே!!!
எம் ஒருவனொடு போய்விடவில்லை
இன்னும் முட்களுக்கிடையில்
பச்சிளம்குழந்தைகளின்
தொப்புள்கொடி முடியாத
இரத்த சீற்றம் இடைவிடாதே 
வடிந்து கொண்டிருக்கிறது....

போராடுவது 
வெற்றிக்காக அல்ல
உரிமைக்காக என்று
சூழுரைத்து  வெறியேற்றுங்கள்

திரும்பி வருகிறேன்
வெகு விரைவில்

புது களத்தில்
புளுதி பறக்க
வெற்றிச் செங்கொடியோடு
முத்தண்ணன் முன்நிற்க
பக்கத்தில் எந்தையுடன்
உங்கள் சிந்தையினூடே....

- பாலச்சந்திர பிரபாகரன்


உரிமை இல்லையடி!!



உரிமை இல்லையடி!!

மிஞ்சி நிற்கும்

உன் நினைவுகளை
பதிவேற்றி
பத்திரப்படுத்தும்
என் சுதந்திரத்தை, 
உத்தரவிட்டு
சிறைபடுத்தும்
உரிமை 
உனக்கு இல்லையடி
பெண்ணே!!!

 ***  ***  ***  *** ***  ***  *** 

Monday, March 11, 2013
Posted by Unknown

வாசித்துப் பாருங்கள் வலையுலக புதுக்குறள்

  வலையுலகில் நாள்தோறும் பல்வேறு பதிவர்கள் பல கருத்துக்களை பதிந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரு வரி பின்னூடத்திற்காகவும், ஒரு வித மன நிறைவுக்காகவும் தான் வலையுலகில் பங்காற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு புதிய பதிவரையும் பின்னூட்டம் மூலம் உற்சாகப்படுத்துவோம்.

நல்ல கருத்துகளை வரவேற்பதிலும், வாழ்த்துவதில் தயக்கம் வேண்டாம் தோழர்களே!!

மண்ணிற்கு எப்படி நல்ல செறிவூட்டப்பட்ட உரம் பலன் தருமோ அதே போல பின்னூட்டம் ஒருவரது எழுத்திற்கு உரம் போல இருக்கும். நமது தலைமுறைகள் இதை செய்தாலே போதும் இனி வரும் காலங்களில் ஒரு மாற்றம் கண்ட புதிய சமூகம் பிறக்கும்.

இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு சேர் ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த திருக்குறளை வாசிக்கும் போது மனதில் நமது பதிவர்களை மனதில் கொண்டு உதயமான புதிய குறள்.


செறிவுடன் திறனான மண்ணூட்டமும்  பின்னூட்டமும்
மாந்தர்க்கே பயன் தருமாம்.

காலையில் பகிர்தலும் மாலையில் பதிதலும்
கணினினுக்கும் கடமைக்கும் உரியதாம்.

வலப்புற சுட்டியை இடக்கையால் சொடுக்கி
வலைப்பதியச் செய்வதே இடுகை.



- தொழிற்களம் அருணேஸ்
Friday, March 1, 2013
Posted by Unknown

மழைக்காதலன் பெயர்க்காரணம்

ஒவ்வொரு தோல்விக்கும்
விதியெனெ பழகிவிட்டால்,
விதியே நீ கண்ட 
தோல்வி தான் என்ன?

சூடான ரத்தத்தின் 
சுவை அறியும்
என் நரம்புகள்
இன்னமும் இடைவிடாது
இம்சை செய்கின்றன
போரினை 
விரும்புகிறவனென..,

பாரினில் வீழ்பவன்
பேயன பயப்பவனே!!

இந்த இளரத்தம்,
முதுகொடியும் வரையும்
உறைந்திட போயிடாது!!

கட்டுடைந்த  வெள்ளம் - தரை  
பட்டுடைத்த தருணம்,
சிறை  விட்டுணர்ந்த 
வருணன் - மழை 
பெற்றுயரும் 
வாழ்வென
மிண்டும் வருவேன்.


ரெய்ன் டிஜிட்டல் கிராபிக்ஸ் 

கல்லூரி இரண்டாம் வருடம் துவங்கிய போதே, கணினி வடிவமைப்பில் ஆர்வம் கொண்டதன் பயனாய் வடிவமைப்பு மற்றும் அச்சுத்துறையை சார்ந்த அலுவலகத்தை சொந்தமாக துவங்கியிருந்தேன். வெவ்வேறு பெயரை அந்த நிறுவனத்திற்காக யோசித்தேன். 

பட்டென சொட்டொன்று முகம் மீது விழுந்தது.

ஆம், என் முதல் ஆர்டரை முடித்து கொடுத்த போது மணி காலை 4.30 மணி.
அன்றைய தினத்திற்கு முன் தினம், மாலை 6 மணிக்கே துவங்கியிருந்தது அடைமழை.

கிட்டத்தட்ட 10 மணி நேரம் விடாது பெய்த மழையில் நனைந்து கொண்டே எனது முதல் ஆர்டரை முடித்துக் கொடுத்தேன். அன்றிலிருந்து நான் புதிதாக எந்த ஒரு முயற்சியை செய்தாலும் மழைத்துளியால் நனைய துவங்கிடுவேன்.

ஆம், அப்படியொரு ஆசிர்வாதம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது எனது துணைவனான மழையான்.

என் முதல் துவக்கமாய் 2008 ல் ஆரம்பித்து இன்று வரை என் பெயரில் ஒட்டிக்கொண்டு உணவளித்த துணைவன். ஒவ்வொரு துவழலிலும் 
என் மீது தவழ்ந்து வந்து தன்னம்பிக்கை கொள்ளச் செய்தது என் தொழில்.

வாடிக்கையாலர்களுக்கு நான் செய்து கொடுத்த வடிவமைப்புகளை
பார்த்ததும் அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மட்டுமே இந்த தொழிலை
இன்றும் என்னை விரும்ப செய்யும் முதல் காரணம்.

எனது வடிவமைப்பு மற்றும் அச்சுத் தொழிலில் எனக்கு ஒருவித திருப்தி கிடைக்கிறது. வேறெந்த நிமிடத்திலும் கிடைக்காத நிறைவை சரியான நேரத்தில் வாடிக்கையாளருக்கு, அவரது கேட்புகளை முடித்துக் கொடுக்கும் சமயங்கள் எனக்கு  அளிக்கின்றன.

வெவ்வேறு கால கட்டங்களில் பயணித்தாலும், எனது முதல் தொழிலை இன்னும் மேம்படுத்த இந்த வருடத்தை (2013) பயன்படுத்தப் போகின்றேன்.





 

- அருணேஸ்


Sunday, February 24, 2013
Posted by Unknown

யானைப் பசி

தெளிந்த வேசியின்
நெடுங்காமம் சொல்லாத
இன்பங்களை,
உன் புன் சிரிப்பும்
கண் துடிப்பும்
சொல்லுதடி!!

நீ நீட்டிய 
விரல்நுனியில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
சிறு காதல் பருக்கை
போதுமடி!!  என்
மொத்த பசியும்
முற்றிலும் 
அழிந்து போக...




Saturday, February 16, 2013
Posted by Unknown

காணச்சகியாதோ கண்ணம்மா!!

பராசக்தியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பாட்டன் பாரதியின் தொண்டைக்குழியில் தொக்கி நின்ற வேதனையின் துயரம் எப்படி இருந்திருக்குமோ அதே வேதனையிலான இந்த நிமிடத்தின் எனது காணச்சகியாதோ கண்ணம்மா...






காணச்சகியாதோ கண்ணம்மா!!

பிள்ளைகள் பத்தும்
பார்த்து வளர்த்த
அச்சு பிழைகளாய்
என் பாரதத்தாய்
பெற்றெடுத்தாளோ?

தொப்புல்கொடி தின்னும்
முத்துப்பிள்ளை
அரச கட்டிடத்தில்
தூங்கிவழியுது

பட்டங்கள் கொடுக்கவும்
பாலங்கள் போடவும்
பல  திட்டங்கள்
தீட்டுது அதிலே
விரல்
தீண்டவும் செய்யுது..!!


தட்பமும்  வெட்பமும்
தாவித் தொக்குது
தப்பில்லை
கொழுத்திப் போடுவது
அறிவுப்பிள்ளை
அனுவும் துளைப்போம்
ஆழியையும் கெடுப்போம்
நிலத்தடி குறைப்போம்
நீடுழி வாழ!!

ஊதாரிப் பிள்ளை
ஊழ்வழி பிள்ளை
எச்சிலும் துப்புது
எட்டியும் உதைக்குது
தொட்டிலில் கண்ட
சுகம் தேடி
புட்டியை தேடுது!!

வீரம்பேசும்
வியாபாரப் பிள்ளை
கட்சியில் சேருது
காசுகள் கேட்குது
கட்டிய மனைவியையும்
கம்பிக்குள் பாக்குது!!

பாச்சிளம் கடைக்குட்டியோ
பாலியல் செய்யுது
பாவைப் பெண்டீரோ
நாகரீகம் பேசுது
நாவெல்லாம் நீளுது
நமட்டுச் சிரிப்பும் வேறு!!


கேலியும், கூத்தொன்றே
வாழ்வென போனதால்
பாட்டனே! உன் சவக்குழி
அருகே இடம் தேடி
ஒடி வரும்
கைக்குழந்தை நான்
கவியெழுதி
காணச்சகியாது 
Saturday, January 19, 2013
Posted by Unknown

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -