Archive for September 2011

அதை மட்டும் கேட்டு விடாதே..

நீ கேட்டதை எதையும்
மறுத்தது இல்லை..

என்ன வேன்டும் என்றாலும்,
நீ விரும்பி
கேட்டதுவுமில்லை

சொற்களில்லை..
சொல்ல

வாஸ்து பார்த்து
கட்டிய வாசம்
வரையற்ற உன்
கூந்தல் தேசம்
மறை மறந்த மகரந்தம்
தாங்கி மலர் உனை
சேர்ந்ததுவோ..?

தண்டை, சலங்கை
சலனம் அடங்கி
சாயல் கொண்ட
அத்திப் பழமெனெ
சிவந்த செவ்விதழ்
சிரிப்பை உதிர
சாயம் தேடி வந்ததுவோ..?
தன் மோகம் தீர வந்ததுவோ..?

மலைகள் கலைகள்
ஆக்கினவன்
தன் மதி மயங்கிய
காரணம் கொண்டு
பெண்
பரிமங்களை செதுக்கினவன்,
தோல்வலி கொண்டு,
இரு மடு மீது
சிலை வைத்து
எடுப்பாக்கி - கீழே
இடுப்பையும் தூக்கி
நிறுத்தினனோ..?

எத்தனையோ புள்ளிகளில்
பின்னிய கட்டமைப்பை
திருக்கோலங்களாக்கிய
உன் விரல் தொட
விரும்பிய மின் ஒளி
வட்டமென உரு எடுத்து
வைரமாய் மாறி விட்டதுவோ..?

மந்திரம்
செய்தாய் கூடவே
தந்திரமும் செய்தாய்..

என்ன வேண்டும்
கேட்டுவிடு..

அதை மட்டும் கேட்டு விடாதே..
Sunday, September 18, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

மனதோடு பதிந்த தூறல்...

எந்த வார்தையும் 
எனக்கு உதவ முன்வரவில்லை
ஏனோ என் மீது கோபம் கொண்டு..,
ஒருகனம் சிந்தித்து
பார்க்கையில்
தெரிகிறது
பெண்ணே உன்பால்
கொண்ட அன்பினால்
வார்தையும் என் மேல்
பொறாமைகொள்கின்றதோ..?


தூரத்து மின்னல் ஒளியில்
உன் கூந்தலில் கரையும்
கதிர் அவனின் நிழல்
ஓடி ஒளிகிறதோ
வெட்கத்தில்..

புத்தகங்களில்
கழித்த நிமிடங்களை
எல்லாம் திட்ட
தோன்றுகிறதடி
உன் முகம் பார்க்கின்ற
போதெல்லாம்..


Saturday, September 10, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

தொலைந்த போன கனவு..

கருவில் கற்ற வித்தை
என் கவிதை தொழில்..

தொலைந்த காதலுக்காக..
அலைந்த தேடலுக்காக..
ஆர்ப்பரிக்கும் வேதனைகளுக்காக..
நெற்றிப்பொட்டில் உதிக்கும் 
கோபத்திற்காக..

எப்படியோ என்னுடன்
ஒட்டிப்பிறந்த துணைவன்..

எப்படி பிரிவது...?

அலுவலக வேலைகள் போதும்
அலவளாவ வார்த்தகள் எதற்கடா..?
நோட்டுக்களை தேடி திரியும் 
சில்லரைகளுக்கு என்ன தெரியும் 
என் கவி பற்றி..?

யாருக்கும் அஞ்சா என் பாட்டன்
கற்றுக் கொடுத்த வித்தை....
என் தாயின் கருவிலேயே
கற்றுக் கொண்ட வித்தை..
கண்களின் ஈரமும்
கோபத்தின் உக்கிரமுமாய்
இரு வேறு கோணங்களில்
என்னை அளவெடுத்து
அறிமுகம் செய்த
என் கவி மறப்பேனோ..?

வார்தைகளின் ஓவியம் 
வரைபவனுக்கு மட்டும்
சொந்தம் அல்லவா..?

காலம் எம்மை வீழ்த்தி விடுமா..?
கட்டளைகளுக்கு 
எம்தன் கவி 
தலை தாழ்த்தி விடுமா..?
வறுமை தான் எம்மை 
மிஞ்சிவிடுமா..? - இல்லை
வானம் தான் எம் 
பாதம் தொட்டுவிடுமா..?

பகல் தொலையும் வேலைகளில்
பாரிருள் பார்த்திடுகையில்
எட்டிப்பார்க்கும் 
விண் ஒளி நானல்லவா.?
எம்மை 
வீதிகளில் ஓடுகின்ற


Sunday, September 4, 2011
Posted by தொழிற்களம் அருணேஸ்

facebook link

Google+ Followers

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -