Posted by : Unknown Saturday, January 19, 2013

பராசக்தியிடம் பேசிக்கொண்டிருந்த போது என் பாட்டன் பாரதியின் தொண்டைக்குழியில் தொக்கி நின்ற வேதனையின் துயரம் எப்படி இருந்திருக்குமோ அதே வேதனையிலான இந்த நிமிடத்தின் எனது காணச்சகியாதோ கண்ணம்மா...






காணச்சகியாதோ கண்ணம்மா!!

பிள்ளைகள் பத்தும்
பார்த்து வளர்த்த
அச்சு பிழைகளாய்
என் பாரதத்தாய்
பெற்றெடுத்தாளோ?

தொப்புல்கொடி தின்னும்
முத்துப்பிள்ளை
அரச கட்டிடத்தில்
தூங்கிவழியுது

பட்டங்கள் கொடுக்கவும்
பாலங்கள் போடவும்
பல  திட்டங்கள்
தீட்டுது அதிலே
விரல்
தீண்டவும் செய்யுது..!!


தட்பமும்  வெட்பமும்
தாவித் தொக்குது
தப்பில்லை
கொழுத்திப் போடுவது
அறிவுப்பிள்ளை
அனுவும் துளைப்போம்
ஆழியையும் கெடுப்போம்
நிலத்தடி குறைப்போம்
நீடுழி வாழ!!

ஊதாரிப் பிள்ளை
ஊழ்வழி பிள்ளை
எச்சிலும் துப்புது
எட்டியும் உதைக்குது
தொட்டிலில் கண்ட
சுகம் தேடி
புட்டியை தேடுது!!

வீரம்பேசும்
வியாபாரப் பிள்ளை
கட்சியில் சேருது
காசுகள் கேட்குது
கட்டிய மனைவியையும்
கம்பிக்குள் பாக்குது!!

பாச்சிளம் கடைக்குட்டியோ
பாலியல் செய்யுது
பாவைப் பெண்டீரோ
நாகரீகம் பேசுது
நாவெல்லாம் நீளுது
நமட்டுச் சிரிப்பும் வேறு!!


கேலியும், கூத்தொன்றே
வாழ்வென போனதால்
பாட்டனே! உன் சவக்குழி
அருகே இடம் தேடி
ஒடி வரும்
கைக்குழந்தை நான்
கவியெழுதி
காணச்சகியாது 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -