Posted by : Unknown Saturday, August 27, 2011

கிரஹாம்பெல்...
நான்
வணங்கும்
இறைவனுக்கு அடுத்து
இவரைத்தான்
வணங்கிறேன்..
தொலைப்பேசியை
கண்டுபிடித்ததால்...!

என் சுவாசத்தின்
வாசத்தை
இதன் மூலம் தான்
கேட்டுணர்ந்தேன்..!

சின்ன சின்ன
குறும்பு பேச்சு..!

திகட்டா தீந்தமிழ் பேச்சு..!

காலைவாரும்
கிண்டல் பேச்சு..!

என் காதலை சொன்ன
கனவு பேச்சு..!

அய்யோ கடவுளே...,
என் கூறும்
உன் மழலை பேச்சு..!

இப்படி எவ்வளவோ
உதவியது
என் வீட்டுத் தொலைப்பேசி..!

....... .... .... ..... .......

ஒவ்வொரு முறை
தொலைபேசி மணி
அடிக்கும் போதும்
கால்களுக்கு முன்னே
மனம் தான் செல்கிறது..

உன் குரல் கேட்காதா என்று...!

.            .........

காதல் ..,
சொல்லும் முன்பும்
சொல்லும் போதும்
சொன்ன பின்பும்
சுகமாய் தெரியும்
காதலியை பொருத்து...!



,,,,,, ,,,, ,,,,,,,,

ஒவ்வொரு நாள்
இரவையும்
எதிர்பார்த்து
காத்திருப்பேன்..,
நீ...,
படுத்து உறங்கிய
தலையணையும்,
போர்வையும்
என் மடி மீது
தலை சாய்த்து
உறங்குவதை
பார்க்க...


,,,,,

என்
இருண்ட வானில்
சூரியனாய் வேண்டாம்..
சந்திரனாய் வேண்டாம்..,
ஒரு சிறிய
மெழுகுவர்த்தியாய்
வந்திடு
அது போதும்
என்னையே உருக்கிக்கொண்டு
நான் வாழ்ந்திடுவேன்..

பிரியமுள்ள காதலிக்கு
பிரியமுடன்......


{ 3 comments... read them below or Comment }

  1. ஒவ்வொரு நாள்
    இரவையும்
    எதிர்பார்த்து
    காத்திருப்பேன்..,
    நீ...,
    படுத்து உறங்கிய
    தலையணையும்,
    போர்வையும்
    என் மடி மீது
    தலை சாய்த்து
    உறங்குவதை
    பார்க்க...


    ,,,,,

    என்
    இருண்ட வானில்
    சூரியனாய் வேண்டாம்..
    சந்திரனாய் வேண்டாம்..,
    ஒரு சிறிய
    மெழுகுவர்த்தியாய்
    வந்திடு
    அது போதும்
    என்னையே உருக்கிக்கொண்டு
    நான் வாழ்ந்திடுவேன்..


    அருமை அருமை அருமையான
    நிஜ வரிகள் கவிதையாகின இங்கே
    கண்டு மகிழ்ந்தேன் ஓட்டும் போட்டாச்சு
    சகோ .வாருங்கள் எங்கள் கவிதைகளையும்
    பார்த்து உங்கள் கருத்து மழையைப் பொழியுங்கள்
    நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  2. nala varihal vazthukkal
    http://mohamemajees.blogspot.com/

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -