Posted by : Unknown Thursday, August 25, 2011

அது ஒரு தீபாவளி திருநாள்!
வாசலில் தீபங்கள்
தவங்கிடக்க!
வானத்தில்
மங்கள வாக்கியம் இசைக்க
தித்திப்பான நேரத்தில்,
மத்தாப்பு கையேந்தி
பட்டாசு நீ வெடிக்க
பட்டாடை உடுத்திவந்தாய்..?

பட பட ...
என பட்டாசு
வெடிவெடிக்க
சிதறிய தீத்துளி - உன்
உடைமீது விளையாட
ஓ....
 எனவே நீ அழவே
முத்தான மிட்டாயை
விரலோடு சேர்த்தது போல்
இதழோடு சேர்த்தனரே..!
நிற்காத உன் கண்ணீர்
வற்றாமல் போனதை
தூரத்தில் இரு கண்கள்
துயரத்தில் விழுந்ததே!

-------------------------

சிலு சிலு சிலுவெனவே!
சித்திரம் பேசும் பூங்காற்று
மழைக்கால நேரத்தில்
மனதோடு உறவாட
மழைத்தூறல்
மயிலிறகால்
கதை சொல்லிற்று..,

          .............

இலந்தை மர பழமொன்றை
இரு காலால் பற்றிக்கொண்டு
மாமர கிளையொன்றில்
குயில் ஒன்று கூவியது....

ஆலமர உச்சியினில்
அணில் கூடி
தாவல் தொழிலில்
ஈடுபட்டிருந்தது..!
அந்த பொழுதினில்
ஒரு
பச்சைக்கிளி கூட்டம்
பட்டாம் பூச்சி
பிடித்துக் கொண்டிருந்தது..,
அதில் ஒரு பச்சைக்கிளி
என்னருகே ஓடி வந்து
மாமா
எனக்கும்
பட்டாம்பூச்சி பிடித்து தா..
என்றதுவே..
மந்திரச் சொல் காதில் விழ
மான்போல துள்ளிச்சென்றேன்
பட்டாம்பூச்சி பிடிக்கும் போது
காலில் முள் ஒன்று தைத்திட
பொங்கி வரும் குறுதி தன்னை
உன் கண்ணீர் கழுவியதே..~

முள்ளுக்கு நன்றி சொன்னது இதயம்...

கரையை தொடாத அலையுமில்லை...
காதலை தொடாத ஆளுமில்லை..
என்ன ...,
சிலரது காதல்
அலையினை போல
தொட்டதும் திரும்பி விடுகிறது
அல்லது திருப்பி
விடப்படுகிறது...

என் மனதில் காதல் வந்தது
எப்போதென்பதனை
நானறியேன்!

நாம் தத்தி நடந்த
குழந்த பருவமா..?
சுத்தித் திரியும்
இளமைப் பருவமா..?
எப்போது வந்தது
என் காதல்...?

{ 1 comments... read them below or add one }

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -