Posted by : Unknown Wednesday, August 24, 2011

அடி பெண்ணே!
என்னை சுற்றி
எத்தனையோ உறவுகளிருக்க.,
என் மனம் உன்னை மட்டும்
சுற்றிவருகிறதே ஏனடி..?
என் விழி வழி
முறையின்றி வந்த
முழு மதியே!


தத்தித் தத்தி நாம் நடந்த நாட்களில்
திக்கித் திக்கி நீ பேசும் மழலையில்
சுற்றிச் சுற்றி வாராளி இந்தகால்கள்
இப்போது மட்டும் ஏனிந்த மாற்றம்..?

என்ன பதில் சொல்ல..?
உன் பார்வைகள்
படுத்தும் பாட்டினை
என் இருதயத்திற்கு
எப்படியம்மா  புரியவைப்பேன்!

பேதைப் பெண்ணே!!
ஞாபகம் இருக்கிறதா..,?
நடைகள் பயிலும் நாட்களிலிலே
நடந்தவைகள் யாவும்
நினைவிருக்கா..?

எண்ணி இன்று பார்க்கையிலே
எல்லாம் கணவாய் தெரிகிறதே!!
காலம் பின்னே செல்லட்டுமே..!!


ஓங்கி வளர்ந்த காட்டினிலே!
ஒய்யாரமாய் ஆலமரத்தினிலே!!
ஒருசோடி பறவை கூட்டினிலே!!!
உட்கார்ந்திருக்கும் முட்டையினை,
விழி இரண்டாய் விழுங்கியவளாய்...!

கட்டுக்கடங்கா நதி தன்னை!
எட்டுத்திக்கும் கட்டிவைத்து!!
திட்டு திட்டாய் நுரையோடு,
கூந்தல் என்று வாய்த்தவளாய்..!

நீல வானம் நீர் கொடுத்து!
பூமி தன்னை சீர்படுத்தி!!
சாம்பல் கொண்டு உறம் படைத்து!!!
என் பாட்டி வீட்டு பரங்கிக் காயாய்..,
திருமேனி படைத்தவளாய்..!

என் மன வயக்காட்டில்
வீற்றிருக்கும்
என் சோலக் காட்டு பொம்மையே..!





Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -