Posted by : Unknown Sunday, January 6, 2013

இதோ,
இங்கே தான்
முதன் முதலில்
அவளை கண்டேன்

அவள்
இருக்கையின் சந்தடிகளில்
துப்பட்டாவுடன் சேர்த்து
என் நிமிடங்களும்
சிக்கிக்கிக் கொண்டன

பேருந்தின் அசைவுகளிலும்
நெரிசல்களின் வசைவுகளிலும்
இளமஞ்சள் தேவதையின்
ஓசையில்லா
உதடுகள் இரண்டும்
இன்னமும்
இம்சை செய்கின்றது.




முதல் காதல்,
இப்படித்தான் முளைவிட்டது..

சிக்கல்கள் இல்லாத
வாழ்க்கையின் 
சுகங்களை சொல்லும்
செல்லப் பருவத்தில்
பார்த்த உடனே
பிடித்துப் போகும்
மஞ்சள் தேவதையின் 
காதல்...

இளமஞ்சள் நிறத்தாள்
செய்த இம்சைகள்
கொஞ்ச நஞ்சமா என்ன?

பசுமைக்காடுகளின்
நடுவில் 
மெல்லிய பனியில்
வென்புள்ளிகள் தைத்தவள்
துள்ளி விளையாடினாள்
என்னவளின் கண்களில்



ஓ.. அவள் சிரிப்புக்கு
முத்தாய்ப்பு சேர்ப்பதற்காகவா,
கங்கைச் சுழல்கள்
போட்டியிட்டு 
இரு கண்ணத்தில்
தங்கிவிட்டது?

ஏர்வாடியின் 
அத்தனை கூட்டமும்
கூர்வாள் விளியால்
ஆனாது என்பதை
இப்போது உணர்கிறேன்.

அந்த முதல் காதல்
தவிப்பு செய்யும் என்பதை...

{ 8 comments... read them below or Comment }

  1. காதல் காதல் காதல்
    காதல் இல்லையேல்
    மீண்டும் காதல் ..............அருமை

    காதல் பிறந்த நாட்களின் நினைவுகள்
    தொடருங்கள் காதலை

    ReplyDelete
  2. உண்மைய சொல்லுங்க, யாரு அது ?

    ReplyDelete
    Replies
    1. இருப்பா,, இன்னும் சில வரிகளை சேர்க்கனும் .. அப்பறம் யரு யரு அவங்கன்னு கேட்பே...

      Delete
  3. இப்படித்தான் நம் மனதை சுண்டி இழுக்கும் சில நபர்கள் நம்மிடத்தே தங்கி இம்சிப்பார்கள்....வேறு வழி கவிதையாய் கசிந்து விடுகிறது.

    ReplyDelete
  4. கவர்ந்த உன்னின் வரிகள்...நல்ல கற்ப்பனை.. கற்ப்பனை வளம் இருக்கிறது அருண்...

    உடைத்தெறிய முடியாத மெளனத்தில் நீயும் நானும்!!

    இப்படி ஒரு மெளனமா...உங்கள் அகராதியில்....

    இராத்திரிகள் பேசும் கருத்தரங்கில் பார்வையாளர்...இராத்திரிகள் பேசும் கருத்தரங்கம்....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    மகரந்தங்களின் தூபம் கொண்டு......மகரந்தம் ஒளிவீசிடுமா...

    என்ன ஆச்சர்யம்னா.....காதல் கண்க்கு....புதிதாய் இருக்கிறது....

    ReplyDelete
  5. காற்றும் கூட நடித்திடுமாம்..... நீங்க நடிக்கிறீங்க‌ என்பதற்க்காக காற்றையும் ஏன் துணைக்கு...அது என்ன செய்தது...இதமாய் வீசி இதயத்தை வருடி, கற்பனை சிறகை மீட்டதினாலா....

    இது வந்து போகாத வழித்தடம் இல்லை.....ஓ மைக்காட்....ச்ச்ச.....

    பாலையில் தெரியும் காணலாய்......பாலையில் தெரியும் காணலே விசேசம்..

    ReplyDelete

  6. சில வரிகளை சேர்க்கனும் .. அப்பறம் யரு யரு அவங்கன்னு கேட்பே...

    சில புதியவரிகள் அடையாள வரிகளோ....இன்னும் இன்னும் என்று மனம் பறபறக்கிறதா...இது போதாதென்று..
    யாருக்கு புரியுமோ இல்லையோ வரிக்கு சொந்தகாரருக்கு புரிந்தால் சரி....

    ReplyDelete
  7. கங்கைச் சுழல்கள்
    போட்டியிட்டு
    இரு கண்ணத்தில்
    தங்கிவிட்டது?


    கால்வைத்து விடாதே...ஏன் என்றால் இது கங்க சுழி...ஆபத்து....

    ஏர்வாடியின்
    அத்தனை கூட்டமும்
    கூர்வாள் விளியால்.....

    ஓ ஏர்வாடிக்காரரே.....உங்கள் காதல் விழியின் சக்திக்கு....

    ஏர்வாடி மக்களை ஏனப்பா இழுக்கிறீர்கள்....

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -