Posted by : Unknown Friday, March 1, 2013

  வலையுலகில் நாள்தோறும் பல்வேறு பதிவர்கள் பல கருத்துக்களை பதிந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரு வரி பின்னூடத்திற்காகவும், ஒரு வித மன நிறைவுக்காகவும் தான் வலையுலகில் பங்காற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு புதிய பதிவரையும் பின்னூட்டம் மூலம் உற்சாகப்படுத்துவோம்.

நல்ல கருத்துகளை வரவேற்பதிலும், வாழ்த்துவதில் தயக்கம் வேண்டாம் தோழர்களே!!

மண்ணிற்கு எப்படி நல்ல செறிவூட்டப்பட்ட உரம் பலன் தருமோ அதே போல பின்னூட்டம் ஒருவரது எழுத்திற்கு உரம் போல இருக்கும். நமது தலைமுறைகள் இதை செய்தாலே போதும் இனி வரும் காலங்களில் ஒரு மாற்றம் கண்ட புதிய சமூகம் பிறக்கும்.

இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு சேர் ஆட்டோவின் பின்னால் எழுதப்பட்டிருந்த திருக்குறளை வாசிக்கும் போது மனதில் நமது பதிவர்களை மனதில் கொண்டு உதயமான புதிய குறள்.


செறிவுடன் திறனான மண்ணூட்டமும்  பின்னூட்டமும்
மாந்தர்க்கே பயன் தருமாம்.

காலையில் பகிர்தலும் மாலையில் பதிதலும்
கணினினுக்கும் கடமைக்கும் உரியதாம்.

வலப்புற சுட்டியை இடக்கையால் சொடுக்கி
வலைப்பதியச் செய்வதே இடுகை.



- தொழிற்களம் அருணேஸ்

{ 6 comments... read them below or Comment }

  1. அருமை.. பேசாமல் 1330யும் ரீ-மேக் செய்துவிடலாமே? நல்ல ஐடியாவாக படுகிறது.. இந்தக்கால சூழலுக்கு ஏற்றாற்போல் திருக்குறள் போல் குறள் வெண்பாவில் நிறைய சொல்ல முயற்சிக்கலாம்.. கொஞ்சம் எழுத்துப்பிழைகளை மட்டும் திருத்திக்கொள்ளுங்கள் நண்பா..
    //மண்னூட்டமும்// மண்ணூட்டம்.. தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும்.. மண்+ஊட்டம்...
    //கணிணுக்கும்// இது கணினிக்குமா? அல்லது கனிவுக்குமா?

    ReplyDelete
  2. அசத்தல்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல முயற்சி அருண்! தொடரட்டும்!

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -