Posted by : Unknown Sunday, September 18, 2011

நீ கேட்டதை எதையும்
மறுத்தது இல்லை..

என்ன வேன்டும் என்றாலும்,
நீ விரும்பி
கேட்டதுவுமில்லை

சொற்களில்லை..
சொல்ல

வாஸ்து பார்த்து
கட்டிய வாசம்
வரையற்ற உன்
கூந்தல் தேசம்
மறை மறந்த மகரந்தம்
தாங்கி மலர் உனை
சேர்ந்ததுவோ..?

தண்டை, சலங்கை
சலனம் அடங்கி
சாயல் கொண்ட
அத்திப் பழமெனெ
சிவந்த செவ்விதழ்
சிரிப்பை உதிர
சாயம் தேடி வந்ததுவோ..?
தன் மோகம் தீர வந்ததுவோ..?

மலைகள் கலைகள்
ஆக்கினவன்
தன் மதி மயங்கிய
காரணம் கொண்டு
பெண்
பரிமங்களை செதுக்கினவன்,
தோல்வலி கொண்டு,
இரு மடு மீது
சிலை வைத்து
எடுப்பாக்கி - கீழே
இடுப்பையும் தூக்கி
நிறுத்தினனோ..?

எத்தனையோ புள்ளிகளில்
பின்னிய கட்டமைப்பை
திருக்கோலங்களாக்கிய
உன் விரல் தொட
விரும்பிய மின் ஒளி
வட்டமென உரு எடுத்து
வைரமாய் மாறி விட்டதுவோ..?

மந்திரம்
செய்தாய் கூடவே
தந்திரமும் செய்தாய்..

என்ன வேண்டும்
கேட்டுவிடு..

அதை மட்டும் கேட்டு விடாதே..

{ 2 comments... read them below or Comment }

  1. மிகவும் அருமையான கவிதைகள்.... தொடரட்டும் உங்கள் கவி மழை..... நனைய ஆவலாய்........ கிருஷ்ணா...

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -