Posted by : Unknown Monday, August 22, 2011

காதல் ....
இது வந்து போகாத
வழித்தடம் இல்லை..
பாலையில் தெரியும் காணலாய் 
உணர மட்டுமே முடிகிறது ..

காரணம் ...
இதுவின்றி எதுவும் நடபதில்லை,.
காடும், மலையும், நீரும், நெருப்பும்,
அலையும், கடலும்,,,,
இப்படி எதுவும் காரணம் இல்லாமல்
பிறப்பது இல்லை.

இங்கு நான் படைத்திருக்கும் 
ஒற்றைச்சொல் தொகுப்பினது
பிறப்பிற்கு காரணம்.,
என் நெஞ்சோடு நிலை நிருத்தி
கண்ணோடு இமை தொடுத்து
சிறைபிடித்து என் சுவாசக்குழலில்
இசைபாடும் "சங்கீதமே"
உனக்காக....




கண்ணோடு கண் சேர
வருவது காதல்!
கையோடு கை சேர
வருவது காதல்!
சொல்லோடு சொல் சேர
வருவது காதல்!
இத்தனை காதலில் என் காதல்
என்னென்று நான் சொல்ல..,

                     இருக்கட்டுமே அதனாலென்ன..?

கண் பார்த்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
கை சேர்ந்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
மனம் கலந்த பின் தான்
காதல் வரவேண்டுமா..?
அப்படியானல்
இவை மூன்றுமல்ல - என் காதல் !

ஆம்.,
வித்யாசமானது !
விசித்திரமானது !
ஆனால் உண்மையானது..,


புதிரொன்றை போட்டு
புரியாத போது
விடை சொல்ல வழி இல்லையேல்.,
என் விதி நொந்து
போய்விடாதோ..?
-என புழம்பாதே!

அடி முட்டாள் பெண்ணே..!

உருவமும்..,
ஓசையும் கொண்ட
என் தமிழிடம்
உணர்வுகளை பங்கிட
என் உள்ளம்
எப்படி ஒத்துக்கொள்ளும்..?

..... என் உதடுகள்
ஆடும் நாட்டியத்தை - உன்
விழி வழி பார்த்தால்
புரிந்திடுமோ?
செவி வழி கேட்டால் நான்
என் மதி 'வலி' புரியும்.

இருப்பினும்.,
உனக்காக
சஎன் தமிழ் சொல்லும்
சிறு க'விதை'..!

{ 1 comments... read them below or add one }

  1. உருவமும்..,
    ஓசையும் கொண்ட
    என் தமிழிடம்
    உணர்வுகளை பங்கிட
    என் உள்ளம்
    எப்படி ஒத்துக்கொள்ளும்..?

    அருமையான கவிதைவரிகள்
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -