Posted by : Unknown Monday, September 17, 2012

அன்புள்ள தலைவிக்கு,

ஆட்கொள்ளும்
நிமிடங்களையெல்லாம்
திருப்பி கொடுக்க
விண்ணப்பிக்கிறேன்!!


சிறுசிறுகத்தான்
உன்னை பிடித்து போனது
எப்படியோ என் நிமிடங்களை
செலவழிக்க
வைத்துவிட்டாய் !

நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
மாந்தர்க்கு சிறப்பென்று
என் பாட்டன் சொன்னதை
பகடையாக
வைத்துக் கொண்டாயடி
பெண்ணே!!

தவறவிடும்
நிமிடங்கள் எல்லாம்
என்னை எப்படி கேலி
செய்கின்றது தெரியுமா..?

பிடித்து போனது என்று சொல்லி
என்னை பிடித்துக்கொண்டே போனால்
என் செய்வேன் என் தலைவியே..?




தனிமையுடைத்து..,
என் தவம் கலைத்து..,
தாடி வைத்தவனை
தப்பென்று உணர்த்தி..,
அனைத்தையும் அன்பால்
மாற்றிட செய்து..,
பதிலுக்கு
என் நிமிடங்களை
கொள்ளையிட்டு சென்றால்
ஞாயமாகுமா?





உன்னை தவிர்த்து விடவே
எண்ணுகிறேன்
இப்படியே
ஒவ்வொரு நொடியையும்
என்னுள் விடுகிறேன்..!

புரிந்ததெல்லாம் புரியாமல்
போகட்டும் என்பதை
மட்டும் புத்திக்கு
அடிக்கடி சொல்லி வைக்கிறேன்..!

எப்படியோ என் நிமிடங்களை
உனதாக்கி கொண்டுவிட்டாய்

திரும்ப கேட்கிறேன்

என் நிமிடங்களை
திருப்பி கொடு..!

{ 1 comments... read them below or add one }

  1. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மாந்தர்க்கு சிறப்பென்று என் பாட்டன் சொன்னதை பகடையாக வைத்துக் கொண்டாயடி பெண்ணே...

    ஆணின் அழகு என்பதை அறியமாட்டார்களா என்ன...

    ..ஆட்கொள்ளும்
    நிமிடங்களையெல்லாம்
    திருப்பி கொடுக்க
    விண்ணப்பிக்கிறேன்!!

    கிணற்றில் கல்லெரிந்தால் எடுக்கலாம்....காதலில் விழுந்த நொடிகள் எடுக்கவோ சிறைப்பிடிக்க முடியாது...

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -