Posted by : Unknown Sunday, February 24, 2013

ஒவ்வொரு தோல்விக்கும்

விதியெனெ பழகிவிட்டால்,
விதியே நீ கண்ட 
தோல்வி தான் என்ன?

சூடான ரத்தத்தின் 
சுவை அறியும்
என் நரம்புகள்
இன்னமும் இடைவிடாது
இம்சை செய்கின்றன
போரினை 
விரும்புகிறவனென..,

பாரினில் வீழ்பவன்
பேயன பயப்பவனே!!

இந்த இளரத்தம்,
முதுகொடியும் வரையும்
உறைந்திட போயிடாது!!

கட்டுடைந்த  வெள்ளம் - தரை  
பட்டுடைத்த தருணம்,
சிறை  விட்டுணர்ந்த 
வருணன் - மழை 
பெற்றுயரும் 
வாழ்வென
மிண்டும் வருவேன்.


ரெய்ன் டிஜிட்டல் கிராபிக்ஸ் 

கல்லூரி இரண்டாம் வருடம் துவங்கிய போதே, கணினி வடிவமைப்பில் ஆர்வம் கொண்டதன் பயனாய் வடிவமைப்பு மற்றும் அச்சுத்துறையை சார்ந்த அலுவலகத்தை சொந்தமாக துவங்கியிருந்தேன். வெவ்வேறு பெயரை அந்த நிறுவனத்திற்காக யோசித்தேன். 

பட்டென சொட்டொன்று முகம் மீது விழுந்தது.

ஆம், என் முதல் ஆர்டரை முடித்து கொடுத்த போது மணி காலை 4.30 மணி.
அன்றைய தினத்திற்கு முன் தினம், மாலை 6 மணிக்கே துவங்கியிருந்தது அடைமழை.

கிட்டத்தட்ட 10 மணி நேரம் விடாது பெய்த மழையில் நனைந்து கொண்டே எனது முதல் ஆர்டரை முடித்துக் கொடுத்தேன். அன்றிலிருந்து நான் புதிதாக எந்த ஒரு முயற்சியை செய்தாலும் மழைத்துளியால் நனைய துவங்கிடுவேன்.

ஆம், அப்படியொரு ஆசிர்வாதம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது எனது துணைவனான மழையான்.

என் முதல் துவக்கமாய் 2008 ல் ஆரம்பித்து இன்று வரை என் பெயரில் ஒட்டிக்கொண்டு உணவளித்த துணைவன். ஒவ்வொரு துவழலிலும் 
என் மீது தவழ்ந்து வந்து தன்னம்பிக்கை கொள்ளச் செய்தது என் தொழில்.

வாடிக்கையாலர்களுக்கு நான் செய்து கொடுத்த வடிவமைப்புகளை
பார்த்ததும் அவர்கள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மட்டுமே இந்த தொழிலை
இன்றும் என்னை விரும்ப செய்யும் முதல் காரணம்.

எனது வடிவமைப்பு மற்றும் அச்சுத் தொழிலில் எனக்கு ஒருவித திருப்தி கிடைக்கிறது. வேறெந்த நிமிடத்திலும் கிடைக்காத நிறைவை சரியான நேரத்தில் வாடிக்கையாளருக்கு, அவரது கேட்புகளை முடித்துக் கொடுக்கும் சமயங்கள் எனக்கு  அளிக்கின்றன.

வெவ்வேறு கால கட்டங்களில் பயணித்தாலும், எனது முதல் தொழிலை இன்னும் மேம்படுத்த இந்த வருடத்தை (2013) பயன்படுத்தப் போகின்றேன்.





 

- அருணேஸ்


{ 2 comments... read them below or Comment }

  1. வாழ்த்துக்கள் நண்பா.. பிடித்த வேலையை செய்வதில் இருக்கும் மகிழ்ச்சி மிகவும் அலாதியானது.. நம் வேலையின் ஒவ்வொரு நொடியும் நம் கை வண்ணத்தில் அழகாக மலரும்.. உங்கள் கவிதையின் முதல் வரியே அருமை.. தொடர்ந்து எழுதுங்கள் பிடித்த வேலையை இன்னும் ருசித்து செய்யுங்கள்

    ReplyDelete
  2. சந்தோஷ மழை என்றும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

facebook link

Popular Post

Blog Archive

- Copyright © கற்றதினால் ஆன பயன் -- Powered by thozhirkalam - Designed by Ceecomsolutions -